பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி பார்வதி அம்பாள் உடனாய படிக்காசு வைத்த பசுபதீஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது. பா.ஜ. மாநில துணை தலைவர் எச்.ராஜா, மாவட்ட தலைவர் ராஜேந்திரன், கண்ணங்குடி அம்பலம் படை வென்றான், அமைப்பாளர் செல்வராஜ்,நகர அமைப்பாளர் முத்துராமன், நகர இளைஞர்அணி தலைவர் பாலகிருஷ்ணன், ராஜாராமன், பங்கேற்றனர். முன்னதாக கண்ணங்குடி எல்லையில் , படைவென்றான் தலைமையில் பா.ஜ.,வினர் ராஜாவிற்கு வரவேற்பு கொடுத்தனர். பின்னர் ,செங்கமலத்து அம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.
* திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. காலை முதல் பக்தர்கள் திருத்தளிநாதர் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தனர். முற்பகல் 11 மணிக்கு மூலவருக்கு பலவித திரவியங்களால் அபிஷேகம்,தொடர்ந்து அன்னத்தால் அபிஷேகம்,சிறப்பு தீபாராதனை நடந்தது. கோயில் குருக்கள், பக்தர்கள் அன்னத்துடன் தெப்பக்குளம் சீதளிக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். மலர் தெளித்து, தீபாராதனை நடந்த பின் தீர்த்தத்தில் அன்னத்தை கரைத்தனர். மீண்டும் மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.