பதிவு செய்த நாள்
20
மார்
2024
04:03
பரமக்குடி; பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி விழாவில் காளி அலங்காரத்தில் அம்மன் வலம் வந்தார்.
பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நடக்கிறது. நான்காம் நாளான காலை அம்மன் காளி அலங்காரத்தில் சங்கு, சக்கரம், வில், வால், கதை, கேடயம், நாகம் ஏந்தி, குத்து வாளுடன் சுடர் கிரீடத்துடன் அருள் பாலித்தார். தொடர்ந்து கேடயத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக சின்ன கடை தெருவில் வன்னியகுல சத்திரிய மகாசபை மண்டகப்படியில் அமர்ந்தார். அப்போது சிறுவர், சிறுமியர்கள், பெரியவர்கள் என நேர்த்திக்கடனை செலுத்தும் நோக்கில் குறவன், குறத்தி, அம்மன், கருப்பன், முருகன் என பல்வேறு வேடங்கள் அணிந்து வந்திருந்தனர்.