வட்டமலை ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2024 04:03
அன்னூர்; குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் தேர்த்திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.
குமாரபாளையத்தில், 150 ஆண்டுகள் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 14ம் ஆண்டு பங்குனி உத்திரத் தேரத்திருவிழா நேற்று துவங்கியது. மாகாளியம்மன் கோவிலில் கிராம தேவதை வழிபாடும், கிராம சாந்தி பூஜையும் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி பூஜை துவங்கியது. பக்தர்களுக்கு காப்பு அணிவிக்கப்பட்டது. கோவில் உட்பிரகாரத்தில் உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. குமாரபாளையம், ஆலாம்பாளையம், அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 23ம் தேதி காலை யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், யானை வாகனத்தில் சுவாமி உலா வருதலும் நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை 10:30 மணிக்கு காவடி ஆட்டத்துடன் தேரோட்டம் துவங்குகிறது. சிரவை ஆதீனம், குமரகுருபர சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார். இரவு பவளக்கொடி கும்மியாட்டம் நடக்கிறது. வரும் 25ம் தேதி இரவு 7:00 மணிக்கு பரிவேட்டை, ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலைக் குழுவின் கும்மியாட்டம், தெப்போற்சவம், நடக்கிறது.