பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
தென்காசி:தென்காசி மலையான் தெரு சுப்பிரமணியசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.தென்காசி மலையான் தெரு சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்ததை அடுத்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 26ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, மாலையில் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. இரண்டாம் நாள் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. மூன்றாம் நாள் காலையில் விக்னேஸ்வர பூஜை, துவரா பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்ததானம், யாத்ரா தானம், யாகசாலையிலிருந்து மூலாலயம் பிரவேசம், கும்பம் எழுந்தருளல் நடந்தது. பின்னர் விநாயகர், சுப்பிரமணியசுவாமி, சண்முகர், சுவாமி விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம், சுவாமி வீதி உலா நடந்தது.கும்பாபிஷேக விழாவில் கோயில் தக்கார் கணபதி முருகன், ஆய்வர் ஏமையா, கணக்கர் ஜெகநாதன், நகர அ.தி.மு.க.,செயலாளர் முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஷமீம், நகராட்சி தலைவர் பானு, துணைத் தலைவர் சுடலை, கவுன்சிலர் ராமதாஸ், முன்னாள் கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், வெள்ளப்பாண்டி, கிருஷ்ணமூர்த்தி, அகமதுஷா, உபயதாரர்கள் சுப்பையா, அழகையா, கருப்பசாமி, நகர காங்.,தலைவர் சபரி முருகேசன், மணி, பா.ஜ., திருநாவுக்கரசு, தே.மு.தி.க.,சுப்பிரமணியராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.