பாலமேடு; பாலமேடு அருகே தெத்துரர் நாராயணபுரம் வல்லடிக்காரர் சுவாமி கோயில் மாசி பெருந்திருவிழா நடந்தது.இக்கோயில் விழா சிவராத்திரி அன்று பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விரதம் இருந்த கிராமத்தினர் இன்று மேலதாளத்துடன் ஊர்வலமாக கிராம எல்லை வரை சென்று சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமி ஆபரண பெட்டி அழைத்து வரப்பட்டது. சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், ஆராதனைகள் நடந்தன. கோயில் முன் பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி வழிபாடு செய்தனர். இரவு கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.