பங்குனி உத்திரம்; பழனி நோக்கி பாதயாத்திரை.. ஆடல் பாடலுடன் சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2024 07:03
வேடசந்தூர்; அகரம் பேரூராட்சி காக்காத்தோப்பூரை சேர்ந்த நூறுக்கும் முருக பக்தர்கள், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்த நிலையில் ஆடல் பாடல் உடன் பழனி நோக்கி புறப்பட்டனர். குருசாமி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவினர், குழந்தை வேலப்பர் கோவிலிலும், இன்று மதியம் நல்லதங்காள் ஓடை பக்தர்கள் தங்கும் பகுதியிலும் தங்கி இருந்து தங்களது பயணத்தை தொடர்ந்து பழனி செல்ல உள்ளனர். ஆடல் பாடலுடன் சென்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.