ஸ்ரீநிவாசா கோவிந்தா; ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2024 07:03
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி சாளக்கட்டளை தெப்ப உற்சவத்தின் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஸ்ரீ மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தார்.
திருமலையில் ஸ்ரீவாரி சாளக்கட்டளை தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீதேவி பூதேவி உடனுறை மலையப்ப சுவாமி தெப்பத்தில் வலம் வந்தார். முன்னதாக மாலை 6 மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவியுடன் கூடிய ஸ்ரீ மலையப்ப சுவாமி ஊர்வலம் தொடங்கியது. கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக புஷ்கரிணியை அடைந்த சுவாமி, அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். இசைக்கருவிகள் முழங்க, வேத பண்டிதர்களின் வேதபாராயணம், அன்னமாச்சார்யா திட்ட கலைஞர்களின் சங்கீர்த்தனம் ஆகியவற்றுக்கு மத்தியில் தெப்போத்ஸவம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்நிகழ்ச்சியில் TTD தலைவர் ஸ்ரீ பூமண கருணாகர் ரெட்டி, EO ஸ்ரீ AV தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.