திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பங்குனி மாத பௌர்ணமியை யொட்டி கொளுத்தும் வெயிலின் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கடும் வெயிலால் சில பெண் பக்தர்கள் மாட்டு வண்டியில் கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய மாட வீதியில் பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாற்றுத்திறனாளிகள், குழந்தையுடன் வந்த தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் விரைந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் தங்க கொடி அருகே அமைக்க தனி வழியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மற்றும் எஸ்.பி., கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டனர்.