Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பங்குனி உத்திர ... திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்; கொளுத்தும் வெயிலில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

24 மார்
2024
06:03

பழநி; பழநி, கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது.

பழநி, அடிவாரம், திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா மார்ச்.18 கொடியேற்றத்துடன் துவங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, காவிரி நதியிலிருந்து புனித நீரை தீர்த்தக்காவடியாக எடுத்து வந்தனர். திருவிழாவில் இன்று வரை வள்ளி தெய்வானை முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் கிரிவீதி உலா நடைபெற்றது. மாலையில் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

ஆறாம் நாளான நேற்று திருஆவினன்குடி கோயில் முன் (மார்ச் 23ல்) இரவு 7:01 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கோஷமிட்டனர். தொடர்ந்து வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு சன்னதி வீதி, கிரி வீதியில் நடைபெற்றது. பங்குனி உத்திர தினமான இன்று (மார்ச் 24) அதிகாலை தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து கிரிவீதியில் மாலை 4:00 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் துவங்கி நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். அதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடக்கும். மார்ச் 25,ல் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று, மார்ச்.26,ல் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. மார்ச் 27 ல் இரவு கொடி இறக்குதல் நடைபெறும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் சுவாமி பெரிய நாயகி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளல் நடைபெறும். திருக்கல்யாண உற்ஸவத்தில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar