மதுரை, தத்தனேரி அனுமார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2024 06:03
மதுரை; மதுரை, தத்தனேரி அனுமார் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வேதமந்திரம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை, தத்தனேரி கிராமத்தில் அமைந்துள்ளது அனுமார் கோவில். ராமனுக்கே தொண்டு செய்து உயர்ந்த ஸ்ரீ அனுமார், மதுரை தத்தனேரியில் ஸ்ரீ வியாசராயர் பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பல நூறு வருடங்களாக பக்தர்களுக்கு கேட்பவருக்கு கேட்ட வரம் அளிக்கும் கருணாமூர்த்தியாக எழுந்தருளி கோயிலில் அருள்பாலித்து வருகிறார். அருள்மிகு அனுமார் சுவாமி திருக்கோயிலில் புனர்வு தாரான அஷ்ட பந்தன மஹா ஸ்ம்ப்ரோக்ஷணம் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக காலை விநாயகர் வழிபாடு, கால யாக வேள்வி, வேத பாராயணம் உள்ளிட்ட பூஜைகளுக்கு பிறகு புனித நீர் குடங்கள் யாத்திரையாக புறப்பட்டு கோபுர கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.