அவிநாசி; அவிநாசியில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சமஷ்டி உபநயன விழா நடைபெற்றது.
அவிநாசி மங்கலம் ரோட்டில் உள்ள குருக்ருபா பக்த ஜன சேவா அறக்கட்டளை சார்பில் சுப்பையா சுவாமி மடத்தில் 11ம் ஆண்டு பங்குனி உத்திர சமஸ்டி உபநயன விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் 8 மணி வரை உதக சாந்தி மற்றும் வேதபாராயணம் நடந்தது. அதனையடுத்து நேற்று காலை 9 மணி முதல் 10:30 மணி வரை உபநயனம் மற்றும் ப்ரம்மோபதேச சுப முகூர்த்தம் நடைபெற்றது. அதன்பின் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.