பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த கொட்டவாடி மஹாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.வாழப்பாடி அடுத்த கொட்டவாடி கிராமத்தில், பழமையான மஹாசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. சிதிலமடைந்த அக்கோவிலை அப்புறப்படுத்திய கிராம மக்கள், இந்து சமய அறநிலையத்துறை உதவியுடன், ராஜகோபுரம், குறிஞ்சி கோபுரம், மஹா மண்டபம் சகிதமாக புதுப்பித்தனர்.ஓராண்டுகளாக நடந்து வந்த கோவில் திருப்பணி நிறைவடைந்ததால், அக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடந்தது. அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கீதார்ச்சனைகளும், யாக பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து, காலை, 9 மணியளவில், கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவில், கொட்டவாடி, பேளூர்கரடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.