தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2024 01:03
மானாமதுரை; மானாமதுரை சிப்காட் அருகே உள்ள தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவு பெற்றது.
மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்தாண்டிற்கான பொங்கல் விழா கடந்த 16ந் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேக,ஆராதனைகளும், இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குடம் மற்றும் தீச்சட்டிகள் எடுத்தல், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி கடந்த 23 ந்தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து திருவிழாவின் நிறைவு நாளன்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டிகள் சுப்பிரமணியன்,நாகராஜன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.