சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா; சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2024 03:03
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவையொட்டி அம்மையாருக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் அம்மையார் சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார். இவரின் இயற்பெயர் புனிதவதியார் 63நாயன்மார்களின் பெண் நாயன்மாரான அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வார்கள் இந்நிலையில் இன்று அம்மையார் ஐக்கிய விழாவையொட்டி பங்குனி சோமகிருது நட்சத்திர தினமான அம்மையாருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள் மஞ்சல், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.அதை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர்.