மாதேஸ்வரர் கோவிலில் 2 நாட்கள் தங்கி சுவாமி தரிசனம் செய்த படுகர், பழங்குடி மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2024 03:03
கூடலூர்; கூடலூர் நந்தட்டி ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் திருவிழாவில், படுகர் மற்றும் பழங்குடி மக்கள் இரண்டு நாட்கள் தங்கி, பாரம்பரிய இசையுடன் நடனமாடி சாமி தரிசனம் செய்தனர்.
கூடலூர், நந்தட்டி ஸ்ரீ மாதேஸ்வரர் கோவில் திருவிழா, 24ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 10:00 மணிக்கு ஜம்மக்காரர் (பூசாரி) குலதெய்வ பூஜையும், ஸ்ரீமாதேஸ்வரரை வணங்கினர். 25ம் தேதி பூசாரி வீட்டிலிருந்து மாதேஸ்வரரின் சில்லான ஆபரணங்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து காலை 11:30 மணிக்கு கணபதி ஹோமம் நிகழ்ச்சி நடந்தது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக சிறப்பு பூஜைகள். அபிஷேகங்களும் நடந்தது. விழாவை முன்னிட்டு, பூர்வ குடிக்களான படுகர் மற்றும் பழங்குடியின மக்கள், கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்ததுடன், விடிய விடிய பாரம்பரிய இசையுடன் நடனமாடி சாமியை தரிசனம் செய்தனர். நிறைவு நாளில் கோவிலிருந்து, குலதெய்வ ஆபரணங்கள் மேளதாளத்துடன் மீண்டும் பூசாரி வீட்டுக்கு எடுத்து சென்றனர். விழா குறித்து பழங்குடி பெண் கேத்தி குருகையில், சாமியை வேண்டி பூஜை செய்வோம். எங்களுக்கு சாமி கொடுக்கும். அது போதும். எங்களுக்கு வேர் யார் கொடுப்பார் என்றார்.