திருத்தணி; திருத்தணி காந்தி நகர் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி விழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. விழாவின் ஏழாம் நாளான நேற்று, திரவுபதியம்மன் திருமணம் நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில் யாக சாலை அமைத்து, ஹோமம் மற்றும் உற்சவர் அர்ச்சுனன் மற்றும் திரவுபதி அம்மனுக்கு திருமணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். வரும் 1ம் தேதி அர்ச்சுனன் தபசு, 7ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா, 8ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வில்வளைப்பு மகாபாரத நாடகம், திருத்தணி நாடக குழுவினரால் நடந்தது.