குன்றுவளர்ந்த பிடாரி அம்மன் பங்குனி திருவிழா; பூச்சொரிதலுடன் தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2024 10:03
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலை குன்று வளர்ந்த பிடாரி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கியது. இக்கோயிலின் பங்குனித் திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை முதல் இரவு வரை பிரான்மலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து வந்தனர். அம்மனுக்கு பாலலாபிஷேகம் செய்யப்பட்டு பூச்சொரிதல் நடந்தது. இன்று (மார்ச் 30) இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்குகிறது. 10 நாள் திருவிழாவாக ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. தினமும் அம்மன் சப்பரத்தில் வீதி உலா வருகிறார். 9-ம் திருநாளான ஏப். 7ம் தேதி பிடாரி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. ஏப். 8ம் தேதி கிடாவெட்டி அம்மனுக்கு வழிபாடு நடக்கிறது.