Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் ... உலக நன்மை வேண்டி வாராகி அம்மன் கோயிலில் அமாவாசை யாக பூஜை உலக நன்மை வேண்டி வாராகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகை மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
நாகை மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
07:04

நாகை ; நாகையில் கோலாகலமாக நடைபெற்ற, பிரசித்தி பெற்ற மகாகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா; 3 மணி நேரம் இடைவிடாது நடைபெற்ற தீமிதி திருவிழாவில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி,நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலின் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 2ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. நாள்தோறும் அம்பாள், அம்ச வாகனம் மற்றும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று பூக்குழி இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது ஆலயத்தில் இருந்து எழுந்தருளிய அம்மன் பூக்குழிக்கு எதிரே உள்ள மணிமண்டபத்தில் அமர்ந்து  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனைத் தொடர்ந்து, கரகம் எடுத்து வந்த பூசாரி பூக்குழியில் இறங்க , அடுத்தடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் எலுமிச்சை பழங்களை வானில் வீசி இரண்டு மணி நேரம் இடைவிடாது  தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar