மழை வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உச்சிப்பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 07:04
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் வாயிலில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு, மழை பொழிய வேண்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மழை பொழிய வேண்டியும், கோடை வெப்பத்தை தனித்து உயிரினங்களை குளிர்விக்கவும், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ராஜகோபுர வாயிலில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு 16 வகையான திரவியங்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. முன்னதாக, கணபதி ஹோமம், கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. மழை பொய்க்கும் காலத்தில் உச்சிப்பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனை செய்து குளிர்வித்தால் மழை பெய்து உயிர்களை குளிர்விக்க செய்வார் என்பது ஐதீகம். அதன்படி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கோபுரத்தின் நுழைவாயிலில் 30 அடி உயரமுள்ள கல்நிலையும் பிரம்மாண்ட கதவுகளுக்கும் உள்ளன. அதன் மேல் பகுதியில் கிழக்கு நோக்கி உச்சிப்பிள்ளையார் அருள்பாளித்து வருகிறார். இதற்காக, கடந்த மாதம் 28ம் தேதி துவங்கி 12 நாட்களுக்கு உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.