செகுடப்ப ஐயனார் கோயில் விழா; விதவிதமாய் வேஷம் போட்டு பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 10:04
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே நடந்த பங்குனித் திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக விதவிதமாக வேசம் போட்டு ஊர்வலமாக வந்தனர்.
எஸ்.புதூர் ஒன்றியம் குறும்பலூர் செகுடப்ப ஐயனார், கருப்பர் சாமி கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மற்றும் புலிக்குத்து நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று மாலை 4:00 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக விதவிதமான வேசம் போட்டு வீதிகளில் ஆடி பாடி வந்தனர். பாரம்பரிய முறைப்படி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா இறுதியில் படுகளம் சாய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் உடலில் சேறு பூசிக்கொண்டு வயல்களில் ஓடி வந்தனர். அங்கு புலி வேட்டையாடும் நிகழ்வு நடத்தப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் பூசாரிபட்டி, எஸ்.புதூர், செம்மாம்பட்டி உள்ளிட்ட ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களிலும் திருவிழா கோலாகலமாக நடந்தது.