செங்கல் சிவபார்வதி கோவிலில் பறக்கும் அனுமன் சிலை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2024 11:04
களியக்காவிளை, களியக்காவிளை அருகே உதியன்குளம் கரை செங்கல் ஊராட்சி மகேஸ்வரத்தில் சிவபார் வதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 111 அடி உயரத்தில் அமைந்துள்ள மகா சிவலிங்கத்தின் அரு கில் கட்டப்பட்ட ஆஞ்ச நேயவைகுண்டதேவ லோகம் திறப்பு விழா நேற்று நடந்தது. மடாதி பதி சுவாமி மகேஸ்வரா னந்த சரஸ்வதி தலைமை வகித்து, குத்துவிளக் கேற்றி திறந்து வைத்தார். அவர் கூறும்போது, இந்த கோவில் சிவலிங் கத்தின் அருகில் 80 அடி உயர வைகுண்ட தேவ லோகத்தின் மீது 64 அடி நீளத்தில் உள்ள அனுமான் சிலை சஞ்சீவி மலையை சுமந்து காற்றில் பறந்து செல்வது போன்ற வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. வைகுண்ட தேவலோகமும், மகா சிவலிங்கமும் அரு கருகே அமைந்துள்ளது. மகா சிவலிங்கத்திற்குள் சென்று அதன் மேல் பகுதியில் உள்ள கைலா யத்தை தரிசித்து விட்டு அனுமான் உள்பகுதி சிலையின் வழியாக அதையொட்டியுள்ள வைகுண்ட தேவலோ கத்தில் செல்லும் வகை யில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வைகுண்ட தேவலோகத்தில் சயன கணபதி மற்றும் 8 வடிவங்களில் உள்ள அஷ்ட லெட்சுமி சிலை கள் பிரதிஷ்டை செய்யப் பட்டு உள்ளன. அனந்த சயனத்தில் மகாவிஷ்ணு மற்றும் மகாவிஷ்ணு வின் 10 அவதாரங்கள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளது என்றார்.