அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்திற்கு திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2024 07:04
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனை முன்னிட்டு திருமுருகன் பூண்டியில் உள்ள திருமுருகநாதர் சாமி, அணைப்புதூரில் உள்ள ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலில் எழுந்தருளினார். அதில்,சிறப்பு மண்டபக் கட்டளை, அபிஷேகம், அலங்காரம் திருமுருகநாத சாமிக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவிநாசி போஸ்ட் ஆபீஸ் வீதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே,ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் திருமுருகநாதர் சுவாமியை, எதிர்கொண்டு வரவேற்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது. அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள ஊமையஞ் செட்டியார் தண்ணீர் பந்தல் மண்டபத்தில் கட்டளைதாரர்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு,திருமுருகநாதர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார்.