அயோத்தி ஸ்ரீராமர் நெற்றியில் சூரிய திலகம்; பக்தரகள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2024 03:04
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.
அயோத்தியில் இன்று 17 ம் தேதி ராம நவமி விழா கோலாகலமாக துவங்கியது. அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வந்தனர். கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை தரிசனம் மற்றும் ஆரத்தி போன்றவற்றுக்கான அனைத்து சிறப்பு பாஸ் முன்பதிவுகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைவரும் ஒரே பாதையில் செல்ல வேண்டும். மங்கள ஆரத்தியில் தொடங்கி இரவு 11 மணி வரை தரிசனத்தின் காலம் 19 மணி நேரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரசாதத்தின் போது ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே திரை மூடப்படும். சிறப்பு விருந்தினர்கள் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குப் பிறகு மட்டுமே தரிசனத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஸ்ரீ ராம் ஜன்மோத்சவ் கொண்டாட்டம் அயோத்தி நகரம் முழுவதும் சுமார் நூறு பெரிய LED திரைகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.