பதிவு செய்த நாள்
18
ஏப்
2024
12:04
ஹைதராபாத்; ஸ்ரீராம நவமி ஷோபா யாத்திரையில் நேற்று, ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதால் ஹைதராபாத் நகர் எங்கும் காவி நிறமாக காட்சியளித்தது.
பிரம்மாண்டமான ராமர் சிலைகளால் நடைபெற்ற ஸ்ரீராம ஷோபா யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்களின் சிறப்பம்சமாக, பிரமாண்டமான ஷோபா யாத்திரை, நேற்று பிற்பகல் ஆசிப்நகரில் உள்ள சீதாரம்பாக் கோயிலில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலம் மங்கல்ஹாட், ஜம்மரத் பஜார், தூல்பேட்டை, பேகம் பஜார் சத்ரி, சித்தியம்பர் பஜார், கவுலிகுடா, கோடி வழியாகச் சென்று ஹனுமான் வியாமசாலா மைதானத்தில் முடிவடைந்தது. பாக்யநகர் ஸ்ரீராம நவமி உற்சவர் கமிட்டியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் காவி தொப்பிகளை அணிந்தும், ஏந்தியும் கலந்து கொண்டனர். இதனால் ஹைதராபாத் நகர் எங்கும் காவி நிறமாக காட்சியளித்தது.