மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2024 10:04
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரை திருவிழா முன்னிட்டு ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துங்கியது. விழா நாட்களின் போது அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக நேற்று ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் சர்வ அலங்காரங்களுடன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொன்னம்பலம் பிள்ளை மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்திற்கான பூஜைகளை செய்த பின்னர் சிவாச்சாரியார்கள் மாலைகளை மாற்றிக் கொண்ட பின்னர் காலை 9:50 மணிக்கு சோமநாதர் சுவாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்யத்தை ஆனந்தவல்லி அம்மனுக்கு அணிவித்தனர். அதே நேரத்தில் கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தையும் மாற்றிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.