மதுரை சித்திரை திருவிழா; அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2024 10:04
அழகர் மலையில் உற்பத்தியாகும் நூபுரகங்கை தீர்த்தத்தில் சுதபஸ் என்ற முனிவர் விஷ்ணுவை தியானித்து தவத்தில் இருந்தார். அவரைக் காண துர்வாசர் ஒருமுறை வந்திருந்தார். சுதபஸ், துர்வாசரைக் கவனிக்காமல் இருந்து விட்டார். கோபத்தில் துர்வாசர், மண்டூகமாக(தவளையாக) பிறக்கும் படி சபித்துவிட்டார். இதன்பின் சுதபஸ், மண்டுகமுனிவர் என்று பெயர் பெற்றார். சாபவிமோசனமாக துர்வாசர், வேகவதி என்னும் வைகை ஆற்றில் விஷ்ணுவை தியானித்து தவம் செய்ய மீண்டும் பழைய உருவம் கிடைக்கப் பெறுவாய் என்று கூறினார். அதன்படி தவளை உருவத்தோடு வைகையாற்றில் தவம் செய்தார். சித்ரா பவுர்ணமியில் வைகைஆற்றில் இறங்கும் கள்ளழகர், மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருடவாகனத்தில் எழுந்தருள்கிறார். அப்போது மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அருள்கிறார். மே 6ல் அழகர் வைகையில் இறங்கும் வைபவம் நடக்கிறது. நாளை (ஏப்., 23) அதிகாலை 5:51 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.