கூடலுார்; கூடலுார் தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் வாஸ்து சாந்தி ஹோம பூஜை நடந்தது.
கூடலுார் தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோயிலாகும். கட்டடங்கள் பராமரிப்பின்றி அழியும் நிலையில் உள்ளது. சீரமைக்கக் கோரி பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கட்டுமானப் பணிகள் விரைவில் துவக்க வேண்டும் என கோயில் வளாகத்தில் ஆலய புனராவர்த்தன வாஸ்து சாந்தி ஹோம பூஜை நடத்தப்பட்டது. பூஜை சிறக்க அணைப்பட்டி முருகேசன் சித்தர் ஆசீர்வதித்தார். காரைக்குடி ஹயக்ரீவர் வேத பாடசாலை குழுவினர் பூஜையை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வள்ளலார் அருள்நெறி கூடம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வான்மீகநாதர் ஈஸ்வரன் கோயில் திருப்பணி அறக்கட்டளை மற்றும் வார வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.