பதிவு செய்த நாள்
26
ஏப்
2024
11:04
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வேதபாடசாலை மாணவர்களுக்கு மஹோத்சவ பயிற்சி முகாம் நடைபெற்றது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவில், கடந்த 2003ம் ஆண்டு முதல் பெங்களூருவில் இயங்கும் ஸ்ரீஸ்ரீ குருகுல வேத ஆகம பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு நாள் தோறும் வேத, சைவாகம, திருமுறை, சைவ சித்தாந்த பாராயணம், யாகசாலை பூஜைகளையும், ஸ்ரீ ருத்ரம், சமகம், சிவபுராணம், திருப்புகழ் ஆகியவற்றை பாராயணம் செய்து வருகின்றனர். இதுதவிர, கோவிலில் மஹோத்சவ சிறப்பு பயிற்சி முகாமில் பயிற்சியும் பெற்று வருகின்றனர். நடப்பாண்டு பயிற்சி முகாமில், ஸ்ரீஸ்ரீ குருகுலத்தில் இருந்து, 60 மாணவர்கள், மூன்று ஆசிரியர்கள், வேத ஆகம பாடசாலை முதல்வர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சிவம் தலைமையில் பங்கேற்றுள்ளனர். தேர்த்திருவிழாவில், தினமும் காலை மற்றும் மாலையில், கோவிலில் வேத, சைவாகம, திருமுறை ஆகியவற்றை வேதபாடசாலை மாணவர்கள் பாராயணம் செய்து வருகின்றனர்.