பதிவு செய்த நாள்
26
ஏப்
2024
11:04
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழாவில், நேற்று தெப்போற்சவம் நடைபெற்றது.
அவிநாசி கோவிலில், 14ம் தேதி கொடியேற்றத்து டன் தேர்த்திருவிழா துவங்கியது. 21, 22 மற்றும் 23ம் தேதிகளில், தேரோட்டம் நடைபெற்றது. விழாவில், 12ம் நாள் நிகழ்ச்சியாக தெப்போற்சவம் நேற்றிரவு நடைபெற்றது. தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர பெருமான் எழுந்தருளி, ஐந்து முறை குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, மழை பெய்ய வேண்டி தேவாரத்தில் உள்ள பதிகம் பாராயணம் செய்யப்பட்டது. நாதஸ்வர கலைஞர்கள், அமிர்தவர்ஷனி ராகத்தை இசைத்தனர். தெப்பக்குளத்தில், அதிகளவு தண்ணீர் நிரம்பி இருந்ததால், பாதுகாப்பு கருதி பக்தர்கள் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில், போலீசார் மற்றும் அவிநாசி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட னர். முன்னதாக, தேவர் திருமண மண்டப அறக்கட்டளை சார்பில், மண்டபக்கட்டளை நடந்தது. இதில், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கு பின் சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெற்றது.