பதிவு செய்த நாள்
02
நவ
2012
10:11
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, நவ.,13ல் தீபாவளியன்று யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. தினமும் காலை,மாலை யாகசாலைபூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி, சூரனை வதம் செய்யும், சூரசம்ஹாரம், ஆறாம் நாளான, நவ.,18ம் தேதி மாலை, கோயில் கடற்கரையில் நடக்கிறது. 125 சிறப்பு பஸ்கள்: இந்நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், திருச்செந்தூரில், நேற்றுமாலை, தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார் தலைமையில் நடந்தது. முக்கிய ஊர்களில் இருந்து, திருச்செந்தூருக்கு, 125 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவுசெய்யப்ட்டது.