Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடுதல் லட்டுக்கு திருமலையில் ... திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா நவ.,13ல் துவக்கம்! திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
என் பிறவிப் பயனை அடைந்தேன்: துறவியான இளம்பெண் நெகிழ்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 நவ
2012
10:11

சென்னை: இளம் பெண் ஜைன துறவியாகும் விழா, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேனாம்பேட்டை பகுதி அண்ணாசாலையை சேர்ந்தவர் அசோக்குமார் போரா. இவரது மகள் ஷீத்தல், 26. சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட ஷீத்தல், பள்ளி படிப்பை நிறைவு செய்த போது துறவியாக முடிவெடுத்தார். பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க துவங்கியவர், பெற்றோரின் சம்மதத்தை போராடி பெற்றார். இதையடுத்து, அவர் ராஜஸ்தான் சென்று, வரும் 5ம் தேதி முதல், துறவற வாழ்க்கை மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, நேற்று காலை காமராஜர் அரங்கத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது. காலையில், அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட அவருக்கு, உறவினர்கள் ஆரத்தி எடுத்தனர். இதைத் தொடர்ந்து, ஜைன மத சடங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. துறவற வாழ்க்கை குறித்த நெறிமுறைகள், வீடியோ மூலம் ஒளிபரப்பப்பட்டு ஜைன மத போதனைகளும் விளக்கப்பட்டன.

இது குறித்து ஷீத்தல் கூறியதாவது: இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. சிறு வயது முதலே, பிறருக்கு உதவும் வகையில் என் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றி இருந்தது. என்னுடைய நீண்ட கால தேடல் மூலம் துறவறமே அதற்கு மிக சிறந்த வழி என்று கண்டு கொண்டேன். இந்த பயணம் மிக கடுமையானது என்று எனக்கு தெரியும். இப்போது தான் என் பிறவிப் பயனை அடைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில், அவரது பள்ளி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஜைன துறவிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஷீத்தலை வாழ்த்தினர். இன்று காலை, அவர், ராஜஸ்தான் புறப்பட்டுச் செல்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சோனையா சுவாமி கோயிலில் சிவ குளத்தூர் உறவின்முறை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை பொன்னுமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் நேற்று நடந்தது. முத்தியால்பேட்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar