பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
03:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா நிறைவடைந்ததையொட்டி, அம்பாளின் பூப்பல்லக்கு உலா நடந்தது. உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழா, ஏப்., 16ல் கம்பம் நடப்பட்டது, தேரோட்டம் ஏப்., 25ம் தேதி நடந்தது. தொடர்ந்து பரிவேட்டை, வாணவேடிக்கை நிகழ்ச்சி குட்டைத்திடலில் நடந்தது. திருவிழாவின் நிறைவாக, மாரியம்மனுக்கு பால், பன்னீர், மஞ்சள் உட்பட பல்வேறு திரவியங்களில் மகாபிேஷகம் நடந்தது. மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் அம்பாளின் பூப்பல்லக்கில் திருவீதி உலா நடந்தது. கோவிலில் துவங்கி பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, சங்கிலி வீதி, தங்கம்மாள் ஓடை பகுதி வழியாக, மீண்டும் கோவில் வந்தடைந்தது. பக்தர்கள் திரளாக வந்து அம்பாளை வழிபட்டனர். திருவிழாவையொட்டி, சக்தி கலைக்குழுவினரின் பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி குட்டைத்திடலில் நடந்தது. நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.