பதிவு செய்த நாள்
17
மே
2024
11:05
சாத்தான்குளம்; சாத்தான்குளம் குலசை., ரஸ்தா தெரு,உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. பூஜையையொட்டி காலை யாகபூஜை, தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், மோர், இளநீர், உட்பட 108 வகையான அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, படகஞ்சி, பொங்கல், வெண் பொங்கல் உட்பட விதவிதமான படையல் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.