Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ... பாலசமுத்திரம் முத்தாலம்மன் கோவில் விழா பாலசமுத்திரம் முத்தாலம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாய் மூகாம்பிகை அலங்காரத்தில் காஞ்சி சந்தவெளி அம்மன் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தாய் மூகாம்பிகை அலங்காரத்தில் காஞ்சி சந்தவெளி அம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

18 மே
2024
03:05

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் சித்திரை பெருவிழா துவங்கியது. மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கொல்லுார் தாய் மூகாம்பிகை அலங்காரமும் நடந்தது.

இரண்டாம் நாள் உற்சவமான நேற்று இரவு 7:00 மணிக்கு காஞ்சி பாலா குழுவினரின் 108 திருவிளக்கு பூஜையும், சந்தவெளியம்மனுக்கு கர்ப்பரக்ஷாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் நாள் உற்சமான நாளை இரவு 7:00 மணக்கு சந்தவெளி அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, பரதலாயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நான்காம் நாள் உற்சமான வரும் 19ம் தேதி காலை 7:00 மணிக்கு, 108 பால்குடங்களுடன் பூங்கரகம் புறப்பாடும், மதியம் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், அம்மன் வர்ணிப்பும் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், அன்னதானமும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிடப்படுகிறது. இரவு 7:30 மணிக்கு மலர், மின் அலங்காரத்தில் எழுந்தருளும் சந்தவெளியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்படுகிறது. விழா நிறைவு நாளான 21ம் தேதி மதியம் 12:00 மணிக்கு உற்சவ சாந்தி அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சந்தவெளியம்மனுக்கு சாந்தசொரூபிணி அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு மஹாதீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர், ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவினர் மற்றும் இளைஞர் அணி நண்பர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar