வசந்த உற்சவம்; குதிரை வாகனத்தில் திருவள்ளூர் வீரராகவர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 06:05
திருவள்ளூர்; வீரராகவர் கோவிலில் பங்களா தோட்டத்தில் உள்ள மண்டபத்தில் வசந்த உற்சவம் நடந்தது. இதில் உற்சவர் வீரராகவர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொண்டை மண்டலத்தில் உள்ள மிக முக்கிய திவ்ய தேசம். இத்தலத்து குளம்(தீர்த்தம்) கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட விலகுமாம். ஆறுகால பூஜைகள் இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு கொண்ட திருத்தலம். மார்க்கண்டேய புராணத்தில் இத்தலம் குறித்து கூறப்பட்டுள்ளது. மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தலத்தில் பங்களா தோட்டத்தில் உள்ள மண்டபத்தில் இளநீரு மற்றும் நுங்கு அலங்காரத்தில் வசந்த உற்சவம் நடந்தது. விழாவில் இன்று வீரராகவர்உற்சவர் வீரராகவர் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.