பதிவு செய்த நாள்
21
மே
2024
06:05
விழுப்புரம்; விழுப்புரம் அருகே பூவரசங்குப்பத்தில் பிரசித்தி பெற்ற அமிர்தவல்லி நாயிகா சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் 3வது ஸ்வாதி நட்சத்திரத்தை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடப்பது வழக்கமாகும். 3வது ஸ்வாதி நட்சத்திரத்தை யொட்டி, இன்று பூவரசங்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று காலை 6.00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பின், 8.00 மணிக்கு தங்கக்கசவம் சாற்றப்பட்டு லட்சுமி நரசிம்மர் சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9.00 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி தாயாரோடு யாகசாலை நடைபெறும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, ஸ்வாதி ஹோமங்கள் நடைபெற்றது. நரசிம்மர், தன்வந்திரி, ஹயக்கிரீவர், கிருஷ்ணர், ராமர், அனுமர் உள்ளிட்ட தெய்வங்களின் பெயரில் ஜெபிக்கும் ஹோமங்கள் நடந்தன. மதியம் 1.00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. மாலை 4.00 மணிக்கு திருக்கல்யாண வைபோகம் நடந்தது. நாளை (22ம் தேதி) நரசிம்மர் ஜெயந்தியை யொட்டி, காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமலிங்கம், அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் ஆலய பணியாளர்கள், கிராம பொதுமக்கள் செய்தனர்.