Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் ... பூ பல்லாக்கில் நகர்வலம் வந்த  நத்தம் கைலாசநாதர், செண்பகவல்லி அம்மன் பூ பல்லாக்கில் நகர்வலம் வந்த நத்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவர்களுக்கு சாந்தி விழா
எழுத்தின் அளவு:
திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவர்களுக்கு சாந்தி விழா

பதிவு செய்த நாள்

24 மே
2024
10:05

திருப்புத்தூர்; திருப்புத்தூர்  திருத்தளிநாதர் கோயிலில்  வைகாசி விசாகப்  பெருந்திருவிழா நிறைவை அடுத்து பஞ்சமூர்த்திகளுக்கு   உற்ஸவர் சாந்தி விழா நடந்தது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா பத்து நாட்கள் நடைபெற்றது. மே13 ல் கொடியேற்றத்தின் போது, கொடிமரத்தினருகே  திருத்தளிநாதர், சிவகாமியம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர்,சண்டிகேஸ்வரர், விநாயகர் ஆகிய ஐம்பெரும் மூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன.  தினசரி மண்டகப்படி தீபாராதனை நடந்து உற்ஸவர்  திருவீதி உலா நடந்தது. 9 ம் நாளில் தேரோட்டம், 10 ம் நாளில் தெப்ப மண்டபம் எழுந்தருளல் நடந்து விழா நிறைவடைந்தது. நேற்று மாலை 5:30 மணி அளவில் நடராஜர் சன்னதி முன்பாக அஸ்திரதேவர், ஐம்பெரும் மூர்த்திகள் எழுந்தருளினர். உற்ஸவர்கள் விழா அலுப்பு தீரவும், குளிர்விக்கவும், சாந்தப்படுத்தி அடுத்த விழா வரை ஓய்வளிக்க சாந்தி விழா நடந்தது. சிவாச்சார்யர்களால்  உற்ஸவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பால்,இளநீர்,பன்னீர் போன்ற திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் அன்னம் படையலிட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் உற்ஸவர்கள் தங்கள் சேர்க்கை அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar