பதிவு செய்த நாள்
07
நவ
2012
10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தீபாவளியன்று(நவ.,13) காலை 10.30 மணிக்கு, சுவாமிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன், கந்த சஷ்டி திருவிழா துவங்குகிறது. அன்று காலை 8.30 மணிக்கு, அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து, உற்சவர் சுப்பிரமணியர், தெய்வானை, சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்படும். பின், விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். முக்கிய நிகழ்ச்சியாக, நவ.,17ல், வேல் வாங்குதல், நவ., 18ல், சூரசம்ஹார லீலை நடக்கிறது. திருவிழா நாட்களில் காலை 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனையும், இருவேளை யாகசாலை பூஜைகளும், இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து, அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிறைவு நாளான நவ., 19ல் காலை 7 முதல் 7.30 மணிக்குள், கார்த்திகை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடக்கிறது.