பதிவு செய்த நாள்
07
நவ
2012
10:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமானம் பணிக்காக, சென்னையை சேர்ந்த வாஸ்து நிபுணர், ஒரு கிலோ தங்கத்தை, நன்கொடையாக வழங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் விமானம், தங்கமாக்கும் பணி கடந்தாண்டு துவங்கி நடந்து வருகிறது. இதற்காக பக்தர்கள் பலர் நன்கொடை வழங்கி வருகின்றனர். நேற்று, சென்னை ஒரக்கடத்தைசேர்ந்த வாஸ்து நிபுணர் ஆண்டாள் சொக்கலிங்கம், தனது நண்பர்கள் மூலம் திரட்டிய ஒரு கிலோ தங்கத்தை, நேற்று கோயில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் சுப்பிரமணியனிடம் வழங்கினார். அவர் கூறுகையில் ஆண்டாள் கோயில் தங்க விமான பணிக்காக, மேலும் பல நண்பர்களிடம் , தங்கத்தை திரட்டி வழங்க முடிவு செய்துள்ளேன். ஏழைக்கு திருமணம் செய்வது வைப்பதை விட, பல மடங்கு புண்ணியம் செய்வது, விமானத்திற்கு தங்கம் கொடுப்பது, என்றார்.