தென்காசி: செங்கோட்டை குலசேகர கணபதி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.செங்கோட்டை குலசேகர கணபதி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் அனுக்ஞை, கணபதி பூஜை, தேவதா அனுக்ஞை, எஜமானர்வர்ணம், புண்ணியவாசனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. பின்னர் சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம், விமான அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.இரவு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஹரிகரசுப்பிரமணியன் (எ) மணி அய்யர் வருஷாபிஷேக வழிபாட்டை நடத்தினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.