பதிவு செய்த நாள்
25
மே
2024
12:05
பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் திரு ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் மே 16ல் வைகாசி விசாக வசந்த விழா கொடியேற்றம் நடந்தது. வைகாசி விசாக திருவிழாவில் மே 21ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவிழாவின் ஏழாம் நாள், மே 22, திருத்தேரோட்டம் ரத வீதிகளில் நடைபெற்றது. திருவிழாவில் தங்கமயில், காமதேனு ஆட்டுக்கடா,வெள்ளி யானை, வெள்ளி மயில், தங்கக்குதிரை, தங்க பல்லாக்கு வெள்ளி மயில் வாகனங்களில் விழா நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவில் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளியை மணமுடித்ததால், வசந்த விழாவின் பத்தாம் நாளான இன்று (மே 25) காலை தெய்வானை, சப்பரத்தில் இருந்து தனிபல்லக்கில் கோயிலுக்குள் சென்று நடைசாற்றும், திரு ஊடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் வீரபாகுவாக ஓதுவார், சிவநாகராஜன் சென்று சமரசம் செய்தார். அதன் பின் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு கொடி இறக்குதல் நடைபெற்று வைகாசி விசாக உற்சவம் நிறைவு பெறுகிறது.