திருவாலங்காடு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 11:05
ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடில் பாஞ்சாலி நகரில் திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், இந்தாண்டிற்கான, தீமிதி திருவிழா கடந்த 17ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடைப்பெற்று வருகிறது. நேற்று மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதில் திருவாலங்காடு, பழையனுார் சின்னம்மாபேட்டை உட்பட 8 கிராமங்களை சேர்ந்த 1,000த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமித்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இன்று காலை, தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துார் ஊராட்சி பட்டரை பகுதியில் அமைந்துள்ளது எல்லையம்மன் கோவில். இங்கு 34ம் ஆண்டு ஜாத்திரை திருவிழா கடந்த 19ம் தேதி பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை பக்தர்கள் அடிதண்டம் போடுதல் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் உடம்பில் கொக்கி குத்தி ரதம் இழுத்தல், மஞ்சள் நீராடுதல் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கருப்பசாமிக்கு கத்தி மரம் ஏறுதல் நடந்தது. இன்று காலை அம்மன் உடை களைதல், வரும் ஜூன் 2ம் தேதி விடையாத்தி அம்மன் திருவிழாவுடன் ஜாத்திரை திருவிழா நிறைவுபெறுகிறது.