சென்னை இஸ்கான் கோவில் சார்பில் நற்பண்பு வகுப்புகள் ; ஜூன் 16ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2024 12:06
சென்னை; சென்னை இஸ்கான் கோவில் சார்பில் குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் வயதினருக்கான வாராந்திர நற்பண்பு கல்வியை, பாரதத்தின் சூர்ய வம்ச மன்னர்கள் என்ற தலைப்பில் வழங்குகிறது. பங்கேற்பாளர்கள் கடவுள் பக்தி, நல்ல குணங்கள் மற்றும் நமது கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்வதன் மூலம் பயனடைகிறார்கள். அவர்களின் மனம் ஒருமுகப்படும் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும். குழந்தைகள் (6 முதல் 12 வயது வரை) கதைகள், வினாடி வினாக்கள், ஸ்லோகங்கள், பஜனைகள், தீயில்லா சமையல், கலை மற்றும் கைவினைப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் கற்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். டீன் ஏஜ் வயதினர் (13-17 வயது) தலைப்பு சார்ந்த கதைகள், விவாதங்கள், ஒரு நிமிட உரை மூலம் வேடிக்கையாகக் கற்கிறார்கள். வகுப்புகள் ஜூன் மாதம் மத்தியிலிருந்து மார்ச் வரை நீடிக்கும். ஒவ்வொரு வகுப்பின் கால அளவு 1.5-2 மணி நேரம். பல்வேறு வகுப்பு நேரங்கள் உள்ளன. உங்கள் வசதிக்கேற்ற வகுப்பை தேர்ந்தெடுக்கலாம். மேலும் விவரங்களுக்கு மற்றும் வகுப்பில் பதிவு செய்வதற்கு www.iskconchennai.org/bpss என்ற இணையதளத்தை காணவும். மேலும் தொடர்புக்கு8072599295 என்ற எண்ணில் அழைக்கலாம் என சென்னை, இஸ்கான் கோவில் நிர்வாக குழு தெரிவித்துள்ளனர்.