குறிச்சி கம்பீர விநாயகர் கோவிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூன் 2024 05:06
கோவை; வைகாசி மாதத்தில் வரும் கிருத்திகை விரதத்தை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ் - 1 -ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் மூலவர் முருகன் மற்றும் வள்ளி தெய்வானை தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் மற்றும் தேவியர்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.