பதிவு செய்த நாள்
08
நவ
2012
11:11
காஞ்சிபுரம்: பெரியகாஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பில், அன்னை ரேணுகாம்பாள் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பனுக்கு, நாளை புஷ்பாஞ்ஜலி நடைபெற உள்ளது.காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 10:00 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்ஜலி, 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 4:30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, இரவு 7:00 மணிக்கு அன்னதானம், 7:30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. பத்தாம் தேதி காலை 8:00 மணிக்கு மகா அபிஷேகம், 11:00 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 4:00 மணிக்கு நாதஸ்வர இன்னிசை, 5:30 மணிக்கு பஜனை நிகழ்ச்சி, இரவு 7:30 மணிக்கு வீரமணிதாசன் பக்தி பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி, இரவு 11:30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீலஸ்ரீ தர்மசாஸ்தா பஜனை சபா டிரஸ்ட் செய்துள்ளது.