பதிவு செய்த நாள்
08
நவ
2012
11:11
துறையூர்: மகா கணபதி, மண்டு கருப்பண்ண ஸ்வாமி, லாட சன்னாசி சாமி மற்றும் பரிவார தேவதைகளின் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.துறையூர் அருகே பகளவாடியில் எழுந்தருளியுள்ள மகாகணபதி, மண்டு கருப்பண்ண ஸ்வாமி, லாட சன்னாசி ஸ்வாமி மற்றும் பரிவார தேவதைகள் புணர்தாரணம் செய்யப்பட்டது. மூன்று கிராம மக்கள், திருப்பணிக்குழுவினரால் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.கும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி, நவகிரக பூஜைகள், ஹோமம், வேதபாராயணம், கடஸ்தாபனம், கலச பூஜை, ஐந்து கால தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவன்று கடம் புறப்பாடு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோ பூஜை, சிறப்பு பூஜை, ஸ்வாமி தரிசனம் நடந்தது.