பதிவு செய்த நாள்
09
நவ
2012
10:11
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் பம்பையை சுற்றியுள்ள பகுதிகளில், கழிவுகளை வீசி எறிந்தால், 1,000 ரூபாய் அபராதமோ அல்லது ஒரு மாத சிறைத் தண்டனையோ விதிக்கப்படும் என, பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும், 16ம் தேதி முதல், மண்டல உற்சவமும், அதைத் தொடர்ந்து, மகரஜோதியும் துவங்க உள்ளது. இந்த உற்சவ காலங்களில், கோடிக்கணக்கான பக்தர்கள் வருவர்.அவர்கள், சபரிமலை மற்றும் பம்பை பகுதிகளில், சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில், கழிவுகளை வீசி எறிய, பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார். "தடையை மீறுபவர்கள் யாராக இருந்தாலும், 1,000 ரூபாய் அபராதமோ அல்லது ஒரு மாத சிறை தண்டனையோ, இரண்டுமோ விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.அறை எடுத்து தங்க விரும்பும் பக்தர்கள், தங்க ளுடையே புகைப்பட அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.