பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
10:06
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பங்காரம்மா கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீகாளஹஸ்தி - பிச்சாட்டூர் சாலையில் கிராம தேவதை கோயில் மறைந்த முன்னாள் அமைச்சரான பொஜ்ஜல. கோபால கிருஷ்ணா ரெட்டி பதவியில் இருந்த சமையத்தில் கட்டப்பட்ட கோயிலில் நேற்று புதன்கிழமை தற்போது வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இந்த கிராம தெய்வக் கோயில் கைலாசகிரி, உபாத்யாயநகர், எல்எஸ்ஐசி காலனி, ராஜீவ் நகர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அருகில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு பிரமாண்டமாக நடைபெறுகின்றன. இந்த திருவிழாவை நிர்வகிப்பதற்கு அப்பகுதியினர் குழு அமைத்துள்ளனர். இந்த நிலையில் கோயிலில் திருவிழாவை யொட்டி
பங்காரம்மாவுக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை மாலை வரை பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் பங்காரம்மா கோவிலில் நடைபெற்ற திருவிழாவை யொட்டி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ., பொஜ்ஜல.சுதீர்ரெட்டியின் மனைவி ரிஷிதா ரெட்டி, கோவில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் ஆகியோர் கோயில் சார்பில், அம்மனுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் பட்டு புடவைகளை கோவில் அர்ச்சகரிடம் வழங்கினர்.
இதில் கோயில் செயல் அலுவலர் நாகேஸ்வரராவ் பேசுகையில்: பங்காரம்மா கோவில் திருவிழாவை யொட்டி ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில், எம்.எல்.ஏ., சுதீர்ரெட்டி மனைவி ரிஷிதா ரெட்டி, அம்மனுக்கு பட்டு புடவை மற்றும் பூஜை பொருட்களை வழங்கியதாகவும் அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மனை விரைவாக தரிசனம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.மேலும் மாலையில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவன் கோயில் சார்பில் அதிகாரிகள் மல்லிகார்ஜுன் பிரசாத் சதீஷ் மாலிக், சிறு கோயில்கள் பொறுப்பாளர் லட்சுமய்யா ஆகியோர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.