மணப்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2024 11:06
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு மகாலட்சுமி யாகம் நடந்தது. அதையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் லட்சுமி நாராயண சுவாமி, கனகவல்லி ஆண்டாள் தாயார், ஹயக்ரீவர், துர்க்கை அம்மன் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம். மகாலட்சுமி சிறப்பு யாகம், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.