மதுரை வீரன் சுவாமி, பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் விழா; தீர்த்த குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2024 11:06
அவிநாசி; அவிநாசிலிங்கம் பாளையம் ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி ஸ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் ஊர்வலம்.
அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசிலிங்கம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி ஸ்ரீ பட்டத்தரசி யம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 29ம் தேதி சாமி சாட்டுதல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இன்று படைக்கலம் எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், அம்மை அழைத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. நாளை மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பட்டத்தரசியம்மன் திருவீதி உலாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு அவிநாசிலிங்கம் பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.